Islamic Widget

March 11, 2011

உலகைத் தாக்கிய சுனாமிகள்!

இன்று காலை ஜப்பாம்னில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 10 மீட்டர் அளவுக்கான பயங்கர சுனாமிகள் அடுத்தடுத்து ஜப்பானைத் தாக்கி வருகின்றன. இதனால் வீடுகள், கார்கள், படகுகள் என எதையும் விட்டு வைக்காமல் வெள்ளம் அடித்துச் செல்கிறது. ஒரு விமான நிலையம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதாக தகவல்கள் வருகின்றன.
அல் ஜஸீரா தொலைக்காட்சி நேரலையாக காண்பித்து வரும் காட்சிகள் மக்களை உறைய வைத்துள்ளது. இந்தச் சுனாமியில் ஜப்பானில் பயங்கர அழிவு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் அடுத்த 45 நிமிடத்தில் பெரிய சுனாமி தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை உலகில் ஏற்பட்டுள்ள சுனாமிகளும் அழிவுகளும்:


* 1755 - ல் போர்ச்சுகலில் ஏற்பட்ட சுனாமியில் 60,000 பேர் பலியாகினர்.

* 1883 - ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 36,000 பேர் பலியாகினர்.

* 1908 - ல் இத்தாலியில் ஏற்பட்ட சுனாமியில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகினர்.

* 1896 - ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 27,000 பேர் பலியாகினர்.

* 1923 - ல் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியில் 1 - 1 / 2 லட்சம் பேர் பலியாகினர்.

* 1933 - ல் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்த சுனாமியில் 3,000 பேர் பலியாகினர்.

* 1960 - ல் சிலியில் ஏற்பட்ட சுனாமியில் 23, 000 பேர் பலியாகினர்.

* 1976 - ல் பிலிப்பைன்சில் உருவான சுனாமியில் 8,000 பேர் பலியாகினர்

* 1998 - ல் பப்பூவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரம் பேர் பலியாகினர்.

* 2004 - ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பல நாடுகளைத் தாக்கியது. தொடந்து இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Source: inneram

No comments:

Post a Comment