பரங்கிப்பேட்டை: எதிர்வரும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தேர்தலில் முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹமது போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்த சிறப்பு கூட்டம் ஒன்றினை நேற்று மாலை 5 மணிக்கு தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். சுமார் 100 பேர் பங்குபெற்ற இக்கூட்டத்தில் ஜமாஅத் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டினை அவர் தெரிவித்தார்.
கூட்டத்தை துவக்கிவைத்து உரை நிகழ்த்திய டாக்டர் நூர் முஹமது பேசியதாவது: 'நான் ஏற்கனவே ஜமாஅத்தில் தலைவராக பணியாற்றியுள்ளேன்' என சில விசயங்களை கூறி நினைவு கூர்ந்தார். மேலும், 'இறையருளால் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் புதிய நிர்வாகத்தை கொண்டு வருவேன், இப்போதிருக்கும் கால மற்றும் பொருளாதார சூழ்நிலையில் அதிசயங்களை நிகழ்த்துவேன் (I will make wonders) என்றும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, கருத்தும் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் சிலர் பேசினர். வழக்கறிஞர் எம்.இ.எஸ். அன்சாரி கருத்து தெரிவித்து பேசியபோது, முன்பு டாக்டர் நூர் முஹம்மது தலைவராக இருந்தபோது அவரை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன், இந்த ஜமாஅத் தலைவர் தேர்வு என்பது போட்டியின்றி பரஸ்பரம் விட்டுக் கொடுத்து எடுக்கப்பட வேண்டிய விசயம் என்று கூறினார்.
முன்பாக கு.நிஜாமுத்தீன், அ.தி.மு.க. நிர்வாகி ஷாஜகான், ஐ. ஹபீப் முஹம்மது, கலிக்குஜ்ஜமான் மற்றும் சிலர் தனது கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் நகர த.மு.மு.க. நிர்வாகிகள், நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், நகர இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி செய்யது ஆரிப், ஓ.எ.டபிள்யூ பாவாஜான், எஹயா மரைக்காயர், ஜெய்னுல் மாலிமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
நன்றி:mypno
No comments:
Post a Comment