Islamic Widget

November 20, 2011

சிதம்பரம் - பு.முட்லூர் புறவழிச்சாலையில் அரசு பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை




பரங்கிப்பேட்டை:சிதம்பரம் - பு.முட்லூர் புறவழிச்சாலையில் அரசு டவுன் பஸ் இயக்க கலெக்டருக்கு கல்லூரி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூருக்கு வெள்ளாற்று வழியாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புறவழிச்சாலை பணிகள் முடிக்கப்பட்டு பஸ் போக்குவரத்து இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.ஆனால் கனரக வாகனங்கள், வேன், கார், பைக் உள்ளிட்டவைகள் சென்று வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கீழமூங்கிலடியில் தனியார் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் உள்ளது.


இங்கு சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரி செல்ல பஸ் வசதி இல்லாததால் பு.முட்லூர் வரை இரண்டு கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ் ஏறிச் செல்கின்றனர்.சிதம்பரம் வழியாக கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பெரும்பாலானவர்கள் நடந்து செல்கின்றனர். கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நலன்கருதி சிதம்பரத்தில் இருந்து பு.முட்லூர் வரை அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment