கடலூர் : வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 47 மி.மீ., மழை பதிவானது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது முதல் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 15 நாட்கள் மழை பெய்தது. கடலோர பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் நீர் நிலைகள் நிரம்பின.
குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கடந்த 7ம் தேதி மழை விட்டதாலும், வெயில் காய்ந்ததாலும் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
No comments:
Post a Comment