Islamic Widget

July 20, 2011

ஹஜ் பயண பயிற்சி முகாம்

கடலூர் : ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு கடலூரில் பயிற்சி முகாம் நடந்தது. தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பில் 2011ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்குப் பயணம் குறித்த பயிற்சி முகாம் கடலூரில் நேற்று நடந்தது. கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஹமா அத் தலைவர் முகம்மது யூனூஸ் தலைமை தாங்கினார். நகர செயலர் அப்துல் வகாப் முன்னிலை வகித்தார். பொதுச் செயலர் முகம்மது கமாலுதீன் வரவேற்றார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி பயிற்சியாளர் முகம்மது இப்ராகீம் விளக்க உரையாற்றினார்.
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைக் கழகத்தின் துணை பதிவாளர் பஜ்லூர் ரஹ்மான், முகமது இஸ்மாயில் ஆகியோர் ஹஜ் பயணத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். முகாமில் கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 400 ஹஜ் பயணிகள் பங்கேற்றனர். நகரத் தலைவர் அப்துல் ரவூப் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment