Islamic Widget

June 23, 2011

பரங்கிப்பேட்டை வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்வு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை சந்தைதோப்பு வாரச்சந்தை ஏலம் கடந்த ஆண்டைவிட இருமடங்கு உயர்ந்தது.


பரங்கிப்பேட்டை முத்துகுமரசாமி கோவிலுக்கு சொந்தமாக சந்தைதோப்பில் வியாழக்கிழமைகளில் வார சந்தை நடந்து வருகிறது. வெளியூரில் இருந்து அதிகமாக வியாபாரிகள் இங்கு வருவதால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மளிகை பொருட்கள், காய்கறி வாங்க வந்து செல்கின்றனர்.
 சந்தையில் வியாபாரிகளிடம் குத்தகை வசூல் செய்வதற்கான உரிமைக்கான ஏலம் இந்து அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் விடப்படுகிறது. 2011 ஆண்டிற்கான ஏலம் நேற்று முத்துகுமாரசாமி கோவிலில் உதவி ஆணையர் ஜெகந்நாதன் தலைமையில் நடந்தது. செல்வம் என்பவர் ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன சந்தைதோப்பு வாரச்சந்தை இந்த ஆண்டு ஏலத்தொகை இருமடங்கு உயர்ந்தது என்பது குறிப்பிடதக்கது. தக்கார் சிவக்குமார், செயல் அலுவலர் சிவக்குமார், வாசு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஏலத்தின்போது பிரச்சனைகள் ஏற்படாத வகையில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

2 comments:

  1. அஹமது மரைக்காயர்June 25, 2011 at 8:46 AM

    பேப்பர் நியூஸ போடுறது தப்பு இல்லீங்கோ, ஆனா மேட்டர ஒரு தடவை படிச்சிட்டு போடுறதுதாங்க சரி....காரணம் என்னான்னு கேட்டா? எனக்கு நெனவு தெரிஞ்ச நாள்லேந்து வெசழாக்கிழமை தாங்க எங்க ஊர்லே சந்தை கூடுதுங்கோ

    ReplyDelete
  2. வெசழாக்கிழமை இல்லைங்கோ வியாழக்கிழமை கோ

    Ali - Riyadh

    ReplyDelete