கடலூர் : சாஷன் கெமிக்கல்சில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்த நான்கு அதிகாரிகளைக் கொண்ட குழுவை கலெக்டர் நியமித்துள்ளார்.கடலூர் சிப்காட்டில் இயங்கும் சாஷன் கெமிக்கல்சில் கடந்த 7ம் தேதி இரவு ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்க கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் திருச்சி தொழிற்சாலைகள் இணை தலைமை ஆய்வாளர் செல்வராஜ், கூடுதல் தலைமை ஆய்வாளர் (ஓய்வு) ரத்தினம், சென்னை மண்டல தொழிலாளர் கல்வி நிலையம் டாக்டர் இளங்கோவன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தலைமை மேலாளர் வரதராஜூலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவானது தொழிற்சாலைகளில் அபாயகரமான ரசாயனப்பொருட்கள் கையாளப்படும் விதம், உற்பத்தி தொழில் முறை நேரில் கூர்ந்தாய்வு செய்து பாதுகாப்பு குறைபாடு உள்ளனவா என கண்டறிய வேண்டும். உற்பத்தி தொழில் முறையில் உள்ள சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இனங்களை நிர்வாகத்தினர் எவ்வாறு மேம்படுத்தி உறுதி செய்வது என்பதற்கான வழிவகைகளை பரிந்துரைக்க வேண்டும் என விசாரணை அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Source: dinamalar

save our native..spread awareness ,,done a good job ismail
ReplyDelete