
முகத்துவாரம் சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது சின்னவாய்க்கால், பில்லுமேடு மற்றும் முடசல் ஓடை முகத்துவாரங்கள் தற்காலிகமாக வெட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக கடலில் மீன் பிடித்தொழில் செய்து வந்தனர். தற்போது கடல் அலையின் மட்டம் அதிகரித்துள்ளதால் விசைப்படகு மூலம் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட முடசல் ஓடை சுற்றுப்பகுதியில் உள்ள மீனவர்கள் மரக்காணம் பகுதியில் அதிகளவில் கிடைக்கும் கடல் நத்தையை பிடிக்கச் சென்றுள்ளனர்.
Source: dinamalar
No comments:
Post a Comment