வாஷிங்டன்: உலக அரங்கில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் இந்தியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலோன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டொனிலோன் இதை தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில், இந்தியா மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருவது, அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்ற முறையில், இதை நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடனான நட்பை, மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவுடன் மட்டுமல்லாமல் தென் கொரியா, சீனா போன்ற நாடுகளுடனும் உறவை பலப்படுத்த வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது.கடந்த 2010 நவம்பர் மாதம் அதிபர் ஒபாமா, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவுடனான உறவை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஒரு பகுதி தான் இது. இவ்வாறு டாம் டொனிலோன் கூறினார்.
source: inneram
No comments:
Post a Comment