Islamic Widget

February 21, 2016

தங்கம் விலை அதிரடி உயர்வு!

சென்னை (21-02-16): சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மாற்றம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 408 உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றிற்கு ரூ 2,779 ஆகவும், பவுனுக்கு ரூ. 22,232 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தில் பவுன் விலை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதே போல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. 1 கிலோ பார் வெள்ளி ரூ37,980க்கு விற்கப்படுகிறது.

No comments:

Post a Comment