இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விரைவு இரயில் மீது 2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இந்துத்துவா பயங்கரவாதிகளே காரணம் என்று சுவாமி அசீமானந்த் மீண்டும் வாக்குமூலம் அளித்துள்ளார்.முன்னதாக சுவாமி அசீமானந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அவரைத் துன்புறுத்தி பெறப்பட்டது என்று அசீமானந்தின் வழக்கறிஞர் மன்வீர் ரதி கூறிய குற்றச்சாட்டையும் சனிக்கிழமையன்று பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் மறுத்துள்ளது.சம்ஜெளதா விரைவு ரயிலில் குண்டு வெடித்த உடனே, இது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் ஆரிஃப் கஸ்மானி என்பவர் இந்த குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி என்றும் முன்னர் கூறப்பட்டது.
சம்ஜெளதா விரைவு ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் அவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
source: inneram
No comments:
Post a Comment