Islamic Widget

January 16, 2011

அசீமானந்தின் வாக்குமூலப் பதிவை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி!

அசீமானந்திடம் இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 164ன் கீழ் பதிவு செய்யப்படவுள்ள வாக்குமூலத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை தேசிய புலணாய்வு நிறுவனத்தின் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2007ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சம்ஜெளதா விரைவு ரயில் குண்டு வெடிப்பில் அசீமானந்த் முக்கியக் குள்ளவாளிகளில் ஒருவர் ஆவார்.
அண்மையில் அசீமானந்த் மாஜிஸ்ட்ரேட் ஒருவரிடம் அளித்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை தன்னுடைய மனுவில் சுட்டிக்காட்டிய சண்டிகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடின்டர் சிங், மத்திய ஆளும் கூட்டணி பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களின் பெயர்களைக் களங்கப்படுத்தவே ஒப்புதல் வாக்குமூலம் வெளியிடப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்காக புலணாய்வு அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் இன்றும் வழக்கறிஞர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.தன்னுடைய மனுவில் கூறப்பட்டுள்ளவற்றைக் கவனத்தில் கொண்டு, சுவாமி அசீமானந்திடம் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலத்திற்கு முன் போதிய முன்னேற்பாடுகளைச் செய்து கொண்ட பிறகே வாக்கு மூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் தன்னுடைய மனுவில் கோரியிருந்தார்.மனுதாரரின் வாதங்களைக் கேட்ட, தேசிய புலணாய்வு நிறுவன சிறப்பு நீதிமன்ற நீதிபதி பஞ்ச்குலா இந்த மனுவை தள்ளுபடி செய்தார். பின்னர் நீதிபதி, சுவாமி அசீமானந்தை தன்னுடைய ஓய்வறைக்கு அழைத்துச் சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

source: inneram

No comments:

Post a Comment