Islamic Widget

November 22, 2010

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் குறைந்த கட்டண விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் தலைமை அதிகாரியான பவன் அரோராவை அந்நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் பதவி நீக்கம் செய்துள்ளது. திரு அரோரா மீது ஊழல் குற்றச் சாட்டுகள் பல எழுந்ததாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.


மேலும் ஸ்டீபன் சுகுமார் என்ற இன்னொரு உயர் அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. இவர் ஏர் இந்தியாவின் பயிற்சித் துறைத் தலைவராக இருக்கிறார். இவர் புதிய ரக விமானங்கள் பற்றிய எவ்வித நிபுணத்துவமும் அற்றவராக இருப்பதே இவருடைய பதவி நீக்கத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.


Source:inneram

No comments:

Post a Comment