பெட்ரோல் விலையை ரூ. 2.50 முதல் ரு. 2.54 வரை உயர்த்தி பெட்ரோலிய நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக இவ்விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரும் பெட்ரோலிய சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா உயர்த்தியுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 2 ரூபாய் 54 பைசாக்களும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2 ரூபாய் 53 பைசாக்களும் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று பெட்ரோலின் விலையை 2 ரூபாய் 94 பைசா முதல் 2 ரூபாய் 96 பைசாக்கள் வரை உயர்த்தி இருந்தன.தற்போதைய விலை உயர்வைத் தொடர்ந்து டில்லியில் ஐஓசி நிலையங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 58 ரூபாய் 37 பைசாக்களுக்கு விற்பனை செய்யப்படும். மற்ற இரு நிறுவனங்களின் விற்பனை மையங்களில் இது 58 ரூபாய் 39 பைசாக்களாக இருக்கும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 92 அமெரிக்க டாலர்களாக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
source: inneram
No comments:
Post a Comment