Islamic Widget

January 16, 2011

ஜெத்தா: புதிய விமானநிலையத்துக்கு அடிக்கல்

ஜெத்தா: 27 பில்லியன் சவூதி ரியால்கள் செலவில் கட்டப்படவிருக்கிற ஜெத்தா விமானநிலையத்திட்டத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

மன்னர் அப்துல் அஸீஸ் விமானநிலையம் என்ற பெயரில் அமையவிருக்கும் இந்த விமான நிலையம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, பயணிகள், யாத்ரிகர்கள் போக்குவரத்துக்குப் போதுமானதாக அமையும் என்று சவூதிஅரேபிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், துணைப்பிரதமருமான பட்டத்து இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இப்பெரும் திட்டப்பணிக்கு இறைஆதரவை நாடி பிரார்தித்த இளவரசர், அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பை வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார். "மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் முழுமை பெறும்" என்றார் அவர்.தற்போதும் ஜெத்தாவில் இயங்கிவரும் "அப்துல் அஸீஸ் விமானநிலையம்" பலவகைகளிலும் பழைமையுடனும் பரப்பளவில் குறுகியும் இருப்பதால், ஹஜ் உள்ளிட்ட உச்சநிலைக் காலங்களில் யாத்ரிகர்களுக்குச் சிரமம் தருவதாக பலதரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் வந்திருந்தன என்பது சொல்லப்படவேண்டியது.

source: inneram

No comments:

Post a Comment