புதுவை: தட்டாஞ்சாவடி ராஜிவ் காந்தி சிலை அருகேயுள்ள போக்குவரத்து சிக்னலை கடந்து சென்ற டேங்கர் லாரி ஒன்றில் இருந்த டீசல் சாலையில் கொட்டியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து புதுவைக்கு, டீசல் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக, கோரிமேடு நோக்கி காலை 9.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த டேங்கர் லாரி ராஜிவ் சிலை போக்குவரத்து சிக்னல் வளைவில் திரும்பும்போது, லாரியில் இருந்த டீசல் சாலையில் வழிந்து கொட்டியது. இதை கவனிக்காத டேங்கர் லாரி ஓட்டுனர் வேகமாக சென்று விட்டார்.அலுவலக நேரமானதால் அவசரமாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பரவியிருந்த டீசலை கவனிக்காமல் சென்றதால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்தனர். இதனை கண்ட போக்குவரத்து காவலர்கள் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, பரவியிருந்த டீசலின் மீது மணலை கொட்டினர். பின், கோரிமேடு தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் பரவியிருந்த டீசல் மீது தண்ணீரை அடித்து நீர்த்து போகச் செய்தனர்.
இதன் பிறகு போக்குவரத்து தொடங்கியது விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
source: inneram
No comments:
Post a Comment