இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், “27 அவர்ஸ்” என்ற ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
இந்தப் படத்தில் ”இப் ஐ ரைஸ் என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு மிகச்சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிலிம் கிரிடிக்ஸ் அசோசியேசன் சார்பில் “சாய்ஸ் மூவி” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. தி சோசியல் நெட் ஒர்க் என்ற படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், அந்த படத்தின் இயக்குனர் டேவிட் பின்செருக்கு சிறந்த இயக்குனர் விருதும், தி கிங்ஸ் ஸ்பீக் படத்தில் நடித்த கோவிலின் பிர்த்துக்கு சிறந்த நடிகர் விருதும், கிளாக் ஸ்வேன் படத்தில் நடித்த நாலி போர்ட் மேனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளது.
விருது வழங்கும் விழா ஆலிவுட்டில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகள் அவருக்கு கிடைத்தது. லண்டனில் அவருக்கு கிராமி விருதும் வழங்கப்பட்டது. தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரைப்பட அமைப்பு விருது வழங்கி உள்ளது.
January 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- டெல்டா மாவட்டங்களில் கனமழை
- புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா
- துபாய், அபிதாபியில் வேலைக்கு ஆள் எடுப்பதாக பெண் மோசடி:
- ரியாத்தில் பரங்கிப்பேட்டை (PIA)யின் கூட்டம் நடைபெற்றது
- தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
- தொண்டு நிறுவன "ஷெட்' விற்றதை தடுத்ததால் முற்றுகை
- ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி
- ஹஜ் பயணிகளின் பயணம் திடீர் ரத்து : பயணிகளும்,பொதுமக்களும் அதிர்ச்சி
- வருகிற 30-ந்தேதி மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு
- குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்
No comments:
Post a Comment