கடலூர்: கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியேறும் வழி நேற்று முதல் மாற்றப் பட்டுள்ளது. கடலூர் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே செல்லும் ஜி.ஆர்.கே. காம்ப்ளக்ஸ் சாலை குறுகலாக இருந்ததாலும், இதே வழியில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சென்று வருவதாலும் பஸ்கள் வெளியேறுவதில் சிரமம் இருந்தது. மேலும், மெயின் ரோட் டில் பஸ் திரும்பும் போது அடிக் கடி சிறுசிறு விபத்துகளும் ஏற்பட்டன. இதனைத் தவிர்க்கும் பொருட்டு போலீசார் போக்குவ ரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தனர். அதன்படி புதுச்சேரி மற்றும் பண்ருட்டி செல்லும் பஸ்கள் நேற்று காலை முதல் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக திருப்பி விட்டனர். இதன் காரணமாக ஜி.ஆர்.கே. காம்ப்ளக்ஸ் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
இருப்பினும் இந்த சாலையின் இரு பகுதியிலும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும், அதே பகுதியில் பஸ்கள் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதாலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனை தவிர்த்திட, இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும்.
மேலும், சிதம்பரம், விருத்தாசலம் மார்க்கங்களில் இருந்து வரும் பஸ்களை ரயில்வே மேம்பாலம் வழியாக நேரடியாக பஸ் நிலையம் செல்ல போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
September 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- ஆன்லனில் இண்டேன், எச்.பி, சமையல் வாயு முன்பதிவு!
- பரங்கிப்பேட்டை அருகே தகராறு
- பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- கடலூரில் போக்குவரத்து மாற்றம்: போலீசார் நடவடிக்கை
No comments:
Post a Comment