Islamic Widget

September 16, 2010

குப்பை மேடானது சில்வர் பீச்

கடலூர் : விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்ததைத் தொடர்ந்து கடலூர் சில்வர் பீச் குப்பை மேடாக காட்சி அளித்தது.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் 472 இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஸ்வரூப விநாயகர் சிலைகள் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் 380 சிலைகளை மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட் டது. அவற்றில் 218 சிலைகளும், விழுப்புரம்
 
மாவட்டத்திலிருந்து 78 சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வந்து கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப் பட்டது. கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும் பெரும்பாலான சிலைகள் 50 முதல் 100 மீட்டர் தூரத்திலேயே கரைக்கப்பட்டது. இதனால் கடலில் போடப்பட்ட சிலைகள் உடைந்து அலையில் கரைக்கு அடித்து வரப்பட்டது. அதேப்போன்று சிலைகள் வைக்க பயன்படுத்திய பலகைகள், கழிகள் மரத்துண்டுகள் மற்றும் சிலைகளில் போடப்பட்டிருந்த மாலைகள், வேட்டிகள் அனைத்தும் அலையில் மீண்டும் கரைக்கு அடித்து வரப்பட்டன. இதில் மரச்சட்டங்கள், பலகைகள், கழிகளை பலர் அடுப்பெறிக்க எடுத்துச் சென்றனர். சிலைகள் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப் பட்டன. மாலைகள், எலுமிச்சை பழம், பிளாஸ்டிக் பைகள் கரை முழுவதும் சிதறிக் கிடந்ததால் கடற்கரை அசுத்தமாக காணப்பட்டது.

No comments:

Post a Comment