பரங்கிப்பேட்டை : தமிழகத்தில் புதிதாக பாலம் கட்டுவது தான் முதல்வர் கருணாநிதியின் சாதனையாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற் றில் 24 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு நேற்று அதற்கான திறப்பு விழா நடந்தது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் சந்தானம், சேர்மன் முத்துபெருமாள், பேரூராட்சி தலைவர்கள் ரவிச்சந்திரன், முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சீத்தாராமன் வரவேற்றார்.புதிய பாலத்தை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:இங்கு பாலம் கட்டப்பட்டதன் மூலம் பரங்கிப்பேட்டை, கிள்ளை, பொன்னந்திட்டு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். தமிழகத்தில் புதிய பாலங்கள் கட்டுவது தான் முதல் வர் கருணாநிதியின் சாதனையாக உள்ளது.இந்த விழாவிற்கு தொகுதி எம்.எல்.ஏ., வைக் காணவில்லை. ஆனால் அழைப்பிதழில் பெயர் போடவில்லை என சட்டசபையில் பேசுகிறார்கள். பரங்கிப்பேட் டையில் இருந்து கிள்ளைக்கு செல்ல புவனகிரி வழியாக 22 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது 3 கி.மீ., தூரத்தில் கிள்ளைக்கு சென்று விடலாம்.கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடற்கரை கிராமங்கள் வழியாகவே இந்த பாலம் வழியாக பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு 30 நிமிடத்தில் சென்று விடலாம். கடந்த சுனாமியின் போது இந்த பாலம் இருந்திருந்தால் அதிகளவில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்காது.கடலூர் மாவட்டத்தில் 743 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம், சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சாலை வசதிகள் உள்ளதால் தான் அதிகளவில் தொழிற்சாலைகள் இங்கு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேம்படுவதுடன் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு செல்ல அரசு விரைவு பஸ் இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
photos tntjpno
September 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- புதுப்பள்ளி
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts
- காதல் தொல்லை: +2 மாணவி தற்கொலை-ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
- அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம்


No comments:
Post a Comment