Islamic Widget

December 04, 2010

சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை

முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக சவூதி மன்னருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட விருப்பதாகத் தெரிகிறது.


சவூதி மன்னரின் அரசவைச் செய்தியின் பிரகாரம் டிசம்பர் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மன்னருக்கு மற்றுமொரு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும், முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டுள்ள கோளாறினை நிவர்த்திக்கும் வகையில் ஏற்கெனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக இது அமையும் என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், சவூதியிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகு முள்ளந்தண்டில் ஏற்பட்டிருந்த இரத்த அடைப்பினை நீக்குமுகமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் மன்னர் அப்துல்லாஹ் நியூயார்க் சென்றிருந்தார். குறித்த அறுவை சிகிச்சையின் பின்னர் மன்னரின் உடல்நிலை பெரிதும் தேறியுள்ளதாக சவூதி சுகாதார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு வகைப் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ள 80 வயதான மன்னர் அப்துல்லாஹ் மருத்துவ சிகிச்சை பெறுமுகமாக கடந்த இரண்டு வருட காலத்தில் அதிக நாட்களை வெளிநாட்டிலேயே கழித்து வருகிறார். இந்நிலையில், அவரது ஒன்றுவிட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான சுல்தான் பின் அப்துல் அஸீஸ் நாட்டைப் பரிபாலித்து வருகின்றார்.

Source:.inneram

No comments:

Post a Comment