Islamic Widget

December 04, 2010

புதிய ஏவுகணைச் சோதனையில் இந்தியா

கடந்த வியாழக்கிழமை (02.12.2010) இந்திய இராணுவம் ஒரிஸ்ஸா மாநிலத்தில் புதிய சூப்பர்சொனிக் ஏவுகணைச் சோதனையொன்றை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.


290 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடிய இந்த ஏவுகணைக்கு 'ப்ரஹ்மோஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'கடற்படைப் படகுகள் உள்ளிட்ட கிட்டிய இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது' என இராணுவப் பணிப்பாளர் எஸ்.பி. தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய – ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணை இதற்கு முன்னரும் பலமுறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரஹ்மபுத்திரா நதியின் பெயரோடு ரஷ்யாவின் மொஸ்க்வா நதியின் பெயரையும் இணைத்து பிரஹமோஸ் என இந்த ஏவுகணைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் உள்ள அணுவாயுத சக்தி குறித்த சர்ச்சைகளும் ஏவுகணைப் பரிசோதனைகளும் இடையிடையே ஏற்படுவதுண்டு. இவ்விரு நாடுகளுக்குமிடையில் ஏற்கெனவே மூன்று போர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த இரண்டு நாடுகளுமே அணுவாயுத மறுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்புத் தெரிவித்து வருகின்றமை நினைவுகூரத்தக்கது.

Source:.inneram

No comments:

Post a Comment