பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பள்ளி வளாகத்தில் விளையாடிய போது மாணவரை பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த மடவாபள்ளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் புகழேந்திரன்.
இவரது மகன் விக்னேஷ் (11). குமாரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விக்னேஷை பாம்பு கடித்தது. உடன் விக்னேஷ் தனது தலைமை ஆசிரியர் கபிலாவிடம் தெரிவித்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் விக்னேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவரை பாம்பு கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source: dinamalar
January 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
katta paambu????
ReplyDelete