சிதம்பரம் : சிதம்பரம் பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்களை நிறுத்துவதாக கூறி போலீசார் வழக்குப் பதிந்ததைக் கண்டித்து தனியார் பஸ்களை எடுக்காமல் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிதம்பரம் பஸ் நிலையத்தில் பஸ்களை முறையாக கட்டைகளில் நிறுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவது குறித்து வழக்குப் பதிய டி.எஸ்.பி., மோகன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் கடந்த இரண்டு நாட்களாக பஸ் நிலையத்திற்குள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்ட பஸ்கள் மீது வழக்குப் பதிந்தனர்.
ஆத்திரமடைந்த தனியார் பஸ் ஊழியர்கள், அரசு பஸ் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. நாள் ஒன்றுக்கு 390 பஸ்கள் வருகிறது. இதில் 80 பஸ்கள் மட்டுமே தனியார் பஸ்கள். அணைக்கரை பாலம் பழுதடைந்ததால் கூடுதலாக 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வருகிறது. இதனால்தான் பஸ் நிலையத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஆனால் தனியார் பஸ்களால் மட்டுமே இடையூறு ஏற்படுவதாக வழக்கு போடுவது நியாயமில்லை எனக் கூறி மோட்டார் தொழிலாளர் சங்க செயலர் அன்பழகன் தலைமையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர் பஸ்களை எடுக்காமல் பஸ் நிலையத்திலேயே நிறுத்தி விட்டதால் பஸ் நிலையம் நோக்கி வந்த அனைத்து பஸ்களும் நகரம் முழுவதும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கண்ணபிரான் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக தீர்வு ஏற்பட்டதையொட்டி 11 மணிக்கு துவங்கிய ஸ்டிரைக் 11.40க்கு கைவிடப்பட்டது.
source: dinamalar
January 14, 2011
போலீசை கண்டித்து தனியார் பஸ் ஸ்டிரைக் சிதம்பரத்தில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- உணவுப் பொருட்களை பதப்படுத்தி பாதுகாக்க அதிநவீன தொழில்நுட்பம் தந்து உதவத் தயார்
- பொங்கல்: வெங்காயம் + 12 கிலோ மற்ற காய்கறிகள் ரூ.100க்கு விற்பனை
- அண்ணா நூலக இடமாற்றம்: ஜவாஹிருல்லா அறிக்கை!
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்!
- மின்னணு தகவல் பலகை குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
No comments:
Post a Comment