கடலூர் : சிதம்பரம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய பலே ஆசாமியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதை தடுக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சிறப்பு படை சப் இன்ஸ்பெக்டர் அமீர்ஜான், ஏட்டுகள் நடராஜன், ரவி, சக்திவேல் உள்ளிட்ட பிரிவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் காடுவெட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் செல்வமணி (24) எனவும், அவர் வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது எனவும் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் சிதம்பரத்தில் இரண்டு, திருச்சி அடுத்த லால்குடியில் ஒன்று, வைத்தீஸ்வரன் கோவிலில் ஒன்று என ஐந்து மோட்டார் சைக்கிள்களை திருடியதாக தெரிவித்தார். மேலும் இவர் மீது மீன் சுருட்டி அருகே பஸ் எரித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. உடன் சிறப்புப் படை போலீசார் செல்வமணியை சிதம்பரம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஐந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
source: dinamalar
January 14, 2011
மோட்டார் சைக்கிள்கள் திருடிய பலே ஆசாமி கைது
Subscribe to:
Post Comments (Atom)
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- மீண்டும் முற்றுகை மூடப்பட்டது "டாஸ்மாக்
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- உணவுப் பொருட்களை பதப்படுத்தி பாதுகாக்க அதிநவீன தொழில்நுட்பம் தந்து உதவத் தயார்
- பொங்கல்: வெங்காயம் + 12 கிலோ மற்ற காய்கறிகள் ரூ.100க்கு விற்பனை
- அண்ணா நூலக இடமாற்றம்: ஜவாஹிருல்லா அறிக்கை!
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
No comments:
Post a Comment