சிதம்பரம் :சிதம்பரத்தில் மதம் மாறிய பெண் உடலை பள்ளிவாசலில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் மேலவீதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஆஷியா மரியம் (45). (கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மதம் மாறியவர்). உடல் நலம் சரியில்லாமல் இருந்த ஆஷியா மரியம் இறந்தார். அவரின் உடலை லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச் சென்றனர். இதையறிந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆஷியா மரியம் முஸ்லிமாக மாறியவர்,அவர் பிறப்பால் முஸ்லிம் இல்லை எனக்கூறி லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யக்கூடாது என தடுத்தனர். மேலும், அடக்கம் செய்ய வேண்டும் என்றால் லால்கான் தெரு பள்ளிவாசலில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.இதனால் ஆஷியா மரியத்தின் உறவினர்களுக்கும்,பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உடலை அடக்கம் செய்யாமல் அங்கேயே வைத்து விட்டனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகர இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஆஷியா மரியத்தின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து ஆஷியா மரியம் உடல் லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.
source: dinamalar
October 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- மக்காஹ்வில் மக்கள்கடல்
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
No comments:
Post a Comment