Islamic Widget

October 03, 2010

வழி மண்டல சுழற்சி: தமிழ்நாட்டில் 2 நாள் மழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவ மழை காலம் முடிய இன்னும் 1 வாரம்தான் உள்ளது. அனேகமாக 10-ந்தேதிக்கு பிறகு வட கிழக்கு பருவ மழை தொடங்கி விடும். அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல் சின்னம் உருவாகி மழை வெளுத்து வாங்கும்.

இந்த சூழலில் வழி மண்டலத்தின் மேல் அடுக்கில் உருவான காற்றின் சுழற்சி காரணமாக ஆங்காங்கே மேக கூட்டங்கள் திரண்டு வருகின்றன.
இதனால் விட்டுவிட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
 
அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
 
சென்னையை பொறுத்த வரை வானம் அவ்வப்போது மேகமூட்டமாக காணப்படும். ஆங்காங்கே திடீர்திடீரென மழை பெய்யும்.
 
இன்று காலையில் எழும்பூர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், அயனாவரம், வியாசர்பாடி, மடிப்பாக்கம், வேளச்சேரி உள்பட பல பகுதிகளில் 1/2 மணி நேரம் மழை நீடித்தது. பின்னர் வெயில் அடித்தது.
 
மீண்டும் 1 மணி நேரம் கழித்து மேகமூட்டம் காணப் பட்டது. மழையும் வெயிலும் மாறி மாறி வந்தது.
 
இன்று காலை 8.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 7.1 மி.மீட்டர் மழையும், மீனம் பாக்கத்தில் 20.5 மி.மீட்டர் மழையும் பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment