காபி, டீ குடிப்பவர்களுக்கு மூளை புற்று நோய்க்கான வாய்ப்பு பெருமளவில் தடுக்கிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வை 5 லட்சம் பேரிடம் ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.
ஆய்வில், ‘தினமும் காபி அல்லது டீ ஒரு கப் குடித்தால் மூளையில் ஏற்படும் ‘க்ளையோமா’ எனப்படும் புற்றுநோய்க்கான வாய்ப்பு 34 சதவீதம் குறைகிறது. 100 மி.லி., காபி அல்லது டீ குடித்த பின்னர் தான் இதற்கான பயன் கிடைக்கிறது.
பெண்களுக்கு 26 சதவீத பயனும், ஆண்களுக்கு 41 சதவீத பயனும் கிடைக்கிறது. காபியில் இருக்கும் ‘கேபைன்’ என்ற நச்சு பொருள் மூளைக்கு செல்லும் நரம்புகளின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும், காபி, டீயில் உள்ள ஒருவித ரசாயன பொருள் கேன்சர் செல்களை கட்டுப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment