October 02, 2010
சச்சரவுகள் அடங்கின-நாளை காமன்வெல்த் போட்டி கோலாகல தொடக்கம்
டெல்லி: பெரும் அமளிகள், சண்டைகள், சச்சரவுகளுக்குப் பின்னர் ஒரு வழியாக நாளை தொடங்குகிறது டெல்லி காமன்வெல்த் போட்டி.
விளையாட்டுப் போட்டிக்காக ஒரு வழியாக டெல்லி முழு அளவில் தயாராகி விட்டது. கிட்டத்தட்ட 5800 வீரர், வீராங்கள், அதிகாரிகள் டெல்லியில் குழுமியுள்ளனர். மொத்தம் 6700 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். இதன் மூலம் கடந்த மெல்போர்ன் (2006) போட்டியை ஓவர்டேக் செய்துள்ளது இந்தியா . அப்போட்டியில் 5766 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதுவரை நடந்த காமன்வெல்த் போட்டிகளிலேயே மிகப் பெரியது இது என்ற பெருமையும் டெல்லி போட்டிக்குக் கிடைத்துள்ளது. பல மாத குழப்பங்கள், கடைசி நேர களேபரங்கள், கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதங்கள், ஊழல்கள், முறைகேடுகள், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் என பெரும் அமளியை உருவாக்கி ஓய்ந்துள்ளது டெல்லி போட்டி.
இருப்பினும் தற்போது வெளிநாட்டு அணி நிர்வாகங்கள், மீடியாக்களின் பாராட்டுக்களைப் பெற ஆரம்பித்துள்ளது டெல்லி. கேம்ஸ் வில்லேஜ் முதல் அனைத்து ஏற்பாடுகளும் நன்றாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வெளிநாட்டு மீடியாக்காரர்கள், இவ்வளவு அருமையான ஏற்பாடுகளா என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.
எதிர்ப்பு, அதிருப்தி, கோப, விரக்தி அலைகள் ஓய்ந்து, விளையாட்டு உற்சாக அலை டெல்லியில் கரைபுரள ஆரம்பித்துள்ளது.
நேற்று சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஜேக்கஸ் ரோக் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு டெல்லி வந்து சேர்ந்தது.
நாளை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவரான துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக் கொடி ஏந்தி வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக பலத்த பாதுகாப்பு
தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சம் இருப்பதால் மிக மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆளில்லாத விமானங்கள் மூலம் கண்காணிப்பு, ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணிப்பு என வான் ரீதியாகவும், தரை மார்க்கவும் பல்வேறு கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாதாரண போலீஸார் முதல் அதிரடி கமாண்டோக்கள் வரை கிட்டத்தட்ட 1 லட்சம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். எந்த வகையான தாக்குதல் நடந்தாலும் அதை முறியடிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கேம்ஸ் வில்லேஜுக்கு வந்த ஆஸ்திரேலிய விளையாட்டு அமைச்சர் மார்க் அர்பிப் கூறுகையில், மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேம்ஸ் வில்லேஜுக்குள் வருவதற்குள் எனக்கே போதும் போதுமென்றாகி விட்டது என்று பாராட்டினார்.
போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீஸ் கமிஷனர் தத்வால் நேரடியாக கண்காணிக்கிறார். இருப்பினும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் உத்தரவின் பேரில் உள்துறை அமைச்சகமும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
கேம்ஸ் வில்லேஜில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்லேஜுக்குள் யாரும் அவ்வளவு எளிதில் போய் விட முடியாத அளவுக்கு பாதுகாப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ளது.
போட்டி அட்டவணை
அக்டோபர் 3, 2010 - தொடக்க விழா, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.
நீர் விளையாட்டு
நீச்சல் - அக். 4-9
சின்குரோனைஸ்ட் நீச்சல் - அக். 6-7
டைவிங் - அக். 10-13
வில்வித்தை - அக். 4 முதல் 10ம் தேதி வரை.
தடகளம்
டிராக் அன்ட் பீல்ட்- அக். 6-12
மாரத்தான்- அக். 14
நடைப் போட்டி - அக். 9
பேட்மிண்டன் - அக். 4 முதல் 14ம் தேதி வரை.
குத்துச் சண்டை - அக். 5 முதல் 13ம் தேதி வரை
சைக்கிள் போட்டி
டிராக் - அக். 5 முதல் 8 வரை.
ரோட் மாஸ் ஸ்டார்ட்- அக். 10
ரோட் டைம் டிரையல் - அக். 13.
ஜிம்னாஸ்டிக்ஸ்
ஆர்ட்டிஸ்டிக் - அக். 4 முதல் 8 வரை.
ரிதமிக் - அக். 12 முதல் 14 வரை.
ஹாக்கி - அக். 4 முதல் 14 வரை.
லான் பவுல்ஸ் - அக். 4 முதல் 13 வரை.
நெட்பால் - அக். 4 முதல் 12 வரை.
ரக்பி செவன்ஸ் - அக். 11 முதல் 12 வரை.
துப்பாக்கிச் சுடுதல்
கிளே டார்கெட் - அக். 6-13.
புல் போர் - அக். 9-13
பிஸ்டல், ஸ்மால் போர் - அக். 5 -13.
ஸ்குவாஷ் - அக். 4 முதல் 13 வரை.
டேபிள் டென்னிஸ் - அக். 4 முதல் 14 வரை.
டென்னிஸ் - அக். 4 முதல் 10 வரை.
பளு தூக்குதல் - அக். 4 முதல் 12 வரை.
மல்யுத்தம் - அக். 5 முதல் 10 வரை.
நிறைவு விழா - அக்டோபர் 14, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்.
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- அரசு குடோன்களில் சிமென்ட் விற்பனை மீண்டும் : விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
- பரங்கிப்பேட்டை முடசல் ஓடையில் ரூ. 10 கோடியில் முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை
- கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா!
- அ.தி.மு.க. 39-வது ஆண்டு தொடக்க விழா பி.முட்லூா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவிப்பு எம்.எல்.ஏ.க்கள் அ௫ மொழிதேவன், செல்வி ராமஜெயம் பங்கேற்பு
- பேய் மழை- நிலச்சரிவு: காஷ்மீரில் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு; வீடு இழந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிப்பு
- குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்...
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- மீண்டும் ஒரு தீவிரவாத நாடகம் தோல்வியை தழுவியது
- நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;
- பாகிஸ்தானில் வணக்கஸ்தலமருகில் குண்டுவெடிப்பு 6 பேர் பலி
No comments:
Post a Comment