October 02, 2010
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 15 லட்சம் நிதியுதவி: ஷியா முஸ்லீம் அமைப்பு
லக்னெள: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 15 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஷியா பிரிவு முஸ்லீம் அமைப்பு அறிவித்துள்ளது.
ஹூசைனி டைகர்ஸ் என்ற இந்த ஷியா முஸ்லீம்கள் பிரிவு இளைஞர் அமைப்பின் தலைவர் சமீல் ஷஸ்மி கூறுகையில்,
அயோத்தி பிரச்சனையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வருவது தான் அனைவருக்கும் நல்லது. இதனால் லக்னெள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டாம் என்று சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தையும், முஸ்லீம் தனிச் சட்ட வாரியத்தையும் கேட்டுக் கொள்கிறோம்.
சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சி்ங் யாதவும், டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் சையத் அகமத் புகாரியும் இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது துரதிஷ்டவசமானது.
இந்தப் பிரச்சனையை இத்தோடு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே பல முஸ்லீம் அமைப்புகளும் விரும்புகின்றன. இது தொடர்பாக முஸ்லீம் தனி சட்ட வாரிய நிர்வாகிகளை அணுகி பேசுவோம்.
லக்னெள நீதிமன்றத் தீர்ப்புக்கு முன், என்ன தீ்ர்ப்பு வந்தாலும் அதை ஏற்போம் என்று அனைத்துத் தரப்பினருமே கூறினார்கள். இப்போது அதை எதிர்த்து அப்பீல் செய்வோம் என்று சொல்வது தவறு.
பிரச்சனையை இத்தோடு முடித்துக் கொண்டு, அந்த இடத்தில் கோவிலையும் மசூதியையும் கட்ட இந்துக்களும், முஸ்லீம்களும் கைகோர்க்க வேண்டும். இதற்காக ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும்.
அந்த வகையி்ல் கோவில் கட்ட எங்கள் அமைப்பு ரூ. 15 லட்சத்தை வழங்கும். அதே போல மசூதி கட்ட இந்து அமைப்புகளும் உதவ வேண்டும், இதில் இடைஞ்சல்களை ஏற்படுத்தக் கூடாது என்றார்.
அகில இந்திய முஸ்லீம் தனிச் சட்ட வாரிய உறுப்பினரும் இந்தியாவினமூத்த ஷியா பிரிவு தலைவருமான கல்பே ஜவ்வாத் தான் இந்த ஹூசைனி டைகர்சின் அமைப்பாளர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
source: thatatamil
Labels:
இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
- அரசு குடோன்களில் சிமென்ட் விற்பனை மீண்டும் : விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
- பரங்கிப்பேட்டை முடசல் ஓடையில் ரூ. 10 கோடியில் முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை
- கலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா!
- அ.தி.மு.க. 39-வது ஆண்டு தொடக்க விழா பி.முட்லூா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவிப்பு எம்.எல்.ஏ.க்கள் அ௫ மொழிதேவன், செல்வி ராமஜெயம் பங்கேற்பு
- பேய் மழை- நிலச்சரிவு: காஷ்மீரில் பலியானவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு; வீடு இழந்தவர்கள் உணவு கிடைக்காமல் தவிப்பு
- குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடிக்கு பங்கு – குஜராத் மாநில உயர் போலீஸ் அதிகாரி அளித்துள்ள பிரமாணப்பத்திரம்...
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- கத்தியைக் காட்டி மிரட்டி பெண்களிடம் நகை கொள்ளை: சிதம்பரத்தில் துணிகரம்
- மீண்டும் ஒரு தீவிரவாத நாடகம் தோல்வியை தழுவியது
- நோன்பாளிகளாய் இருந்தவர்கள் 'ரய்யான்' எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்;
இந்துக்களும், முஸ்லீம்களும் கைகோர்க்க வேண்டும். ஆனால் தர்க்கு இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமை இருந்தால் போதும் கல்பே ஜவ்வாத் சொல்வது தவறு. இது பெறும் ஷிர்க்
ReplyDelete