பரங்கிப்பேட்டை முடசல் ஓடைப் பகுதியில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ. 10 கோடி செலவில் முகத்துவாரம் அமைக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஜெகநாதன் தெரிவித்தார்.
முடசல் ஓடைப் பகுதியில் தூர்ந்து போன முகத்துவாரத்தை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கிள்ளை பகுதியில் உலகவங்கி நிதியுதவியுடன் ரூ. 10 கோடி செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளது.
அதுவரை தாற்காலிகமாக ரூ. 30 லட்சம் செலவில் அன்னங்கோவில் முகத்துவாரத்தை 270 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் ஆழத்திலும், சின்னவாய்க்காலில் 180 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும், பில்லுமேட்டில் 220 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்திலும் வெட்டி ஆழப்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
Source: Dinamai
October 18, 2010
பரங்கிப்பேட்டை முடசல் ஓடையில் ரூ. 10 கோடியில் முகத்துவாரம் அமைக்க அரசு நடவடிக்கை
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment