டெல்லி: விரைவில் ஏடிஎம்-ல் இந்தியர்கள் தங்கம் வாங்கலாம். இந்தியா வில் தங்கம் தரும் ஏடிஎம்-கள் அமைப்பதற்காக இந்தியாவுடன் ஜெர்மனி யின் எக்ஸ் ஓரியன்டே லக்ஸ் ஏஜி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம்தான் தங்கம் வாங்க ஆன்லைன் கடை வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தங்கம் தரும் ஏடிஎம்-கள் அமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதில் ஆர்வமுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது, மேற்கொண்டு யாராவது முன்வந்தாலும் பேசுவோம், என்று எக்ஸ் ஓரியன்டே லக்ஸ் ஏஜியின் பிஆர் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவர் ஜோ ட்ரெய்க்ஸ்லர் தெரிவித்தார்.
ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
தங்கம் தரும் ஏடிஎம் இந்த ஆண்டு துபாயில்தான் முதன்முறையாக தொங்கப்பட்டது.
கார்ட்டை செலுத்தினால், ஒன்று, ஐந்து அல்லது 10 கிராம் மதிப்பிலான தங்க பார்கள் வெளியே வரும். மேலும் இந்த இயந்திரத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒருமுறை தங்கத்தின் விலை அப்டேட் செய்யப்படும். இதன் மூலம் லேட்டஸ்ட் விலைக்கு தங்கம் கிடைக்கும்.
இந்த வகை ஏடிஎம் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி), ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளில் உள்ளது. ஜெர்மனியில் தான் இந்த ஏடிஎம்-கள் அதிகம் உள்ளது.
தற்போது 9 ஏடிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. விரைவில் மற்ற இடங்களிலும் திறக்கவிருப்பதாக ட்ரெய்க்ஸ்லர் தெரிவித்தார்.
source: thatstamil
No comments:
Post a Comment