Islamic Widget

October 18, 2010

த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த 460 பே‌ர் ஹஜ் பயண‌ம்

                                              


460 ஹஜ் பயணிகளுடன், முதல் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது.

முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக, சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 5022 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த புனித ஹஜ் பயணத்திற்காக 11 விமானங்கள் இயக்கப்படுகின்றன. 460 பேருட‌ன் முதல் விமானம் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடென்ட் அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் டாக்டர் ஜாகீர் உசேன், தமிழக அரசு செயலர் அலாவுதீன் ஆகியோ‌ர் சால்வைகளை தந்து புனித பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்.


Source: thanthi

No comments:

Post a Comment