Islamic Widget

September 21, 2010

கடற்கரையோர பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் எதிர்கொள்ளுதல் புத்தகம்

கடலூர் : கடற்கரையோர ஒன் றிய பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் எதிர் கொள்ளுதல் பற்றிய புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.


பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கடற் கரையோர ஒன்றியங்க ளான கடலூர், குறிஞ்சிப் பாடி, பரங்கிப் பேட்டை, குமராட்சி பகுதிகளில் 26 ஊராட்சிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க அரசு முன் வந்துள்ளது.இதில் 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேரிடரை எதிர் கொள்ளுதல் மற்றும் தயார்படுத்துதல், 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பேரிடர் மற்றும் சுற் றுச்சூழல் மேலாண்மை தகவல் தொகுப்பு நூல், 11 முதல் 12 வரையுள்ள மாணவர்களுக்கு பேரிடர் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு பற்றிய தொகுப்பு நூல் என 11 ஆயிரத்து 40 புத்தகங்களை கலெக்டர் சீத்தாராமன் நேற்று வழங்கி துவக்கி வைத்தார்.
 
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பங்கேற்றனர். இந்த புத்தகங்கள் வள ஆதார மையங்கள் மூலம் இன்று முதல் பள்ளி வாரியாக வினியோகம் செய்யப்படுகிறது.


Source: dinamalar

No comments:

Post a Comment