Islamic Widget

September 21, 2010

கடலூர் - பிச்சாவரத்திற்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை

பரங்கிப்பேட்டை : கடலூரில் இருந்து பிச்சாவரத்திற்கு அரசு விரைவு பஸ் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பரங்கிப்பேட்டை சேர்மன் முத்துபெருமாள், அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளையை இணைக்கும் வகையில் வெள் ளாற்றில் உயர் மட்ட பாலம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் வழியாக கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத் திற்கு அரசு விரைவு பஸ் இயக்கப் பட்டால் சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்ல முடியும். மேலும் கிள்ளை, பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள கிராம மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை கடலூருக்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால் கடலூரில் இருந்து பிச்சாரவரத்திற்கு அரசு விரைவு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



Source: dinamalar

2 comments:

  1. கோரிக்கை அனுப்பி உள்ளமைக்கு வாழ்த்துக்கள். அமைச்சர் M. R. K. பன்னீர் செல்வம் அவர்களை தொடர்ந்து வலியுறுத்தி நமது கோரிக்கையை "அரசு ஆணை" வடிவில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete