Islamic Widget

September 20, 2010

அயோத்தியில் அசாதாரண அமைதி

நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் நாள் நெருங்க நெருங்க அயோத்தியில் அசாதாரண சூழல் அதிகரித்து வருகிறது.




திரும்பி பக்கம் எல்லாம் துப்பாக்கி ஏந்திய போலீஸôர். இயல்பான வாழ்க்கை அங்கு இல்லை. வியாபாரம் மந்தம், வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற அச்சம் மக்களின் முகத்தில் பார்க்க முடிகிறது.



÷உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் ஜென்ம பூமி- பாபர் மசூதி அமைந்துள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு உரிமையானது என்பது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வரும் 24-ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது.



இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தி அருகே பைசாபாத் மற்றும் பதற்றமான பகுதிகளில் மத்தியப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



அயோத்தி நகரம் கிட்டத்தட்ட மத்தியப் படை வீரர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களிடம் பீதி காணப்படுகிறது.



அயோத்தியில் மத்தியப் படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். இருப்பினும் மக்களிடம் உள்ள அச்சம் அகலவில்லை.



÷வெளியூர் பயணிகள் யாரும் வராததால் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



வழக்கமாக இந்த காலத்தில் ஏராளமானோர் வருவார்கள். வியாபாரம் நன்றாக இருக்கும். ஆனால்÷கடந்த 3 நாள்களாக ஒரு பொருள் கூட விற்பனையாகவில்லை என்று சிறிய ஹோட்டல் நடத்தி வரும் அசோக் குப்தா தெரிவித்தார்.



இங்கு வசிக்கும் எல்லோருமே அமைதியைத்தான் விரும்புகிறோம். இதுவரை நடந்தது எல்லாம் போதும். 1990, 1992-ம் ஆண்டு (பாபர் மசூதி இடிப்பு) நடந்த சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது என்று தையல் கடை நடத்தி வரும் சாதிக் அலி தெரிவித்தார்.



÷தீர்ப்பு எப்படி இருந்தாலும் சரி அதை அனைவரும் மதிக்க வேண்டும். அதைவிட முக்கியம் இங்கு மத நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் எவ்வித பங்கமும் வந்து விடக் கூடாது என்றார் உள்ளூர்வாசி ராஜ் கிஷோர்.



÷"தீர்ப்பு எப்படி இருந்தாலும் அனைவரும் அதை ஏற்றுக்கொள்வோம். யாரும் வன்முறையிலோ, கலவரத்திலோ ஈடுபடக் கூடாது. நாம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்' என்று முஸ்லிம் தனிச் சட்டக் குழு, பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஆகியவை முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.



வியாபாரிகள் ஆலோசனை: மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் காக்க அயோத்தியில் உள்ள வியாபாரிகள் கூடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினர். அதில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது என்றும் சகோதரத்துவத்தைப் பேணுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.



நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னெü கிளையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வரும் 23, 24-ம் தேதிகளில் நீதிமன்றத்தில் வெளியாள்கள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றப் பணியாளர்களுக்கும் சிறப்பு அடையாள அட்டை கொடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.



பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கூடி முடிவு செய்துள்ளனர்.



÷இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுதிர் அகர்வால், டி.வி. சர்மா, எஸ்.யு. கான் ஆகிய மூவருக்கும் இரண்டு மடங்காக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீதிபதி வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.



தீர்ப்பு அளிக்கப்படும் 24-ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடாது என்பதில் நீதிமன்றம் நிர்வாகம் உறுதியாக உள்ளது. மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் ஏற்கெனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.



உத்தரப் பிரதேசம் மட்டுமன்றி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பதற்றமான பகுதிகள் எனக் கருதப்படும் இடங்களில் போலீஸôர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment