சிதம்பரம் புதிய டிஎஸ்பியாக சிவனேசன் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார். டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று சிதம்பரத்தில் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இன்ஸ்பெக்டர்கள் அறிவானந்தம், சுப்ரமணியன், சப்&இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், வனஜா மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே சிதம்பரத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய மூவேந்தன் தஞ்சை பணியிடை பயிற்சி மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிஎஸ்பி சிவனேசன் நிருபர்களிடம் கூறும்போது, சிதம்பரம் உட்கோட்ட பகுதியில் சட்டம்&ஓழுங்கை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து சீரமைக்கப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து தீவிரப்படுத்தப்படும். ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள். லாட்டரி, சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் குறைகளை எந்த நேரத்திலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம் என்றார்.
September 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- துபாய் வேலைவாய்ப்பு: மூன்றுமாத குறுகியகால விசா அறிமுகம்!
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!

No comments:
Post a Comment