Islamic Widget

September 02, 2010

துணை முதல்வர் வருகை: கடலூரில் போக்குவரத்து மாற்றம்

கடலூர்: துணை முதல்வர் வருகையையொட்டி கடலூரில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. கடலூரில் இன்று காலை நடக்கும் தி.மு.க., ஒன்றிய செயலா ளர் ஜெயபால் இல்லத் திருமண விழவில் பங்கேற்க துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரியிலிருந்து காரில் கடலூர் வருகிறார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலைநகர் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். மாலை 5 மணிக்கு சிதம்பரம் கீழ வீதியில் நடக்கும் பொதுக்கூட் டத்தில் பேசுகிறார். இரவு 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து கடலூர் வழியாக புதுச் சேரி சென்று ஓய்வெடுக்கிறார். மறுநாள் 3ம் தேதி காலை விழுப்புரம் செல்கிறார். துணை முதல்வர் வருகையையொட்டி கடலூரில் இன்று காலை 8 மணி முதல் 11 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதில் கடலூர் பஸ் நிலையத் திலிருந்து புதுச்சேரி மற்றும் பண் ருட்டி மார்க்கம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜவான்ஸ்பவன் புறவழிச்சாலை வழியாக செம்மண்டலத்திற்கு திருப்பி விடப்படுகிறது.

Source: Dinamalar

No comments:

Post a Comment