ரசாயன ஆலைக் கழிவுகளை விளை நிலங்களுக்குள் திறந்து விட்டதைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் திரண்டு வந்து, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள ஓடைகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. சிப்காட் தொழிற்பேட்டை ரசாயனத் தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத ஆபத்தான ரசாயனக் கழிவுகளை இப்பகுதி வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் உப்பனாற்றிலும் திறந்து விட்டுவிட்டன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகிந்றனர்.
இந் நிலையில் அண்மையில் பாசன வாய்க்கால்களில் திறந்து விடப்பட்ட ரசாயன ஆலைக் கழிவுகள், கடலூரை அடுத்த சங்கொலிக்குப்பம் கிராமப் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் விளை நிலங்களுக்குள் புகுந்து விட்டன. தென்னந் தோப்புகள், சவுக்குத் தோப்புகள், நெல் வயல்கள், மாந்தோப்புகள் ஆகியவற்றுக்குள் ரசாயனக் கழிவுகள் கலந்த வாய்க்கால் நீர் புகுந்து விட்டதால் பயிர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ரசாயனக் கழிவுகள் கலந்த நீரைக் குடித்த, 2 மாடுகள் செத்து விட்டதாகவும் விவசாயிகள் கூறினர்.
ரசாயன ஆலைகளின் மோசமான நடவடிக்கைகளைக் கண்டித்து, சங்கொலிக்குப்பம் கிராம மக்கள் 200 பேர், கடந்த 25-ம் தேதி கடலூர் - சிதம்பரம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸôரும் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.
இந் நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது, கடலூர் முதுநகர் போலீஸôர் குற்ற வழக்குகள் பதிவு செய்து உள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், சிப்காட் சமூகச் சுற்றுச்சூழல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் உள்ளிட்டோர் முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பல புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர்.
சுற்றுச்சூழலையும் விவசாயத்தையும் பாழ்படுத்தும் ரசாயன ஆலைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அனைத்து முயற்சிகளும் பலன் அழிக்காத நிலையில் வீதிக்கு வந்து போராடிய பாதிக்கப்பட்ட மக்கள் மீதே குற்ற வழக்குகள் பதிவு செய்து இருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
பாதிக்கப்பட்ட சங்கொலிக்குப்பம் கிராம மக்கள் 100 பேர், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் திரண்டு வந்தனர். சட்ட விரோதமாக ஆலைக் கழிவுளை வெளியேற்றும் ரசாயன ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து துன்புறுத்துவதைக் கண்டித்து, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) எஸ்.நடராஜனிடம் மனு அளித்தனர். சொங்கொலிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, துரை, சமூக சுற்றுசூழல் கண்காணிப்பக நிர்வாகிகள் புகழேந்தி, ராமநாதன் உள்ளிட்டோர் உடன் வந்து இருந்தனர்.
September 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- ஜப்பானின் இரண்டாவது அணு உலை வெடிப்பு: 6 லட்சம் பேர் வெளியேற்றம்
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
No comments:
Post a Comment