சிதம்பரம், ஆக. 31: சிதம்பரத்தில் தொலைந்து போன ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.74 ஆயிரம் பணத்தை எடுத்த மர்ம ஆசாமிகளை போலீஸôர் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (72). ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான இவரது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம் கார்டு தொலைந்து போனது. இந்த கார்டினல் ரகசிய குறியீட்டு நம்பரை எழுதி வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் திங்கள்கிழமை வங்கிக்கு சென்று தனது கணக்கு குறித்து மாதாந்திர பட்டியலை பெற்ற போது கடந்த 13-ம் தேதி முதல் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையத்திலிருந்து 9 முறை ரூ.74 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் இதுகுறித்து ஜெயபாலன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
September 01, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

No comments:
Post a Comment