புதுச்சேரி : புதுவை மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் மீனவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தலா 2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கலாம் என மாநில நிலைக்குழு அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன்படி, முஸ்லிம்கள் மற்றும் மீனவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது என முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. எனினும், அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.அரசாணையை உடனே வெளியிடுமாறு அரசியல் தலைவர்கள், முஸ்லிம், மீனவ அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், இதற்கான அரசாணையை கவர்னர் இக்பால்சிங் பிறப்பித் துள்ளார். அரசாணையின்படி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மொத்த இடஒதுக்கீடான 13 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கப்படும். அதேபோல், மீனவர்களுக்கு மிகமிக பிற்படுத்தப்பட்டோர் என தனிப்பிரிவாக அங்கீகரித்து, 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான மொத்த ஒதுக்கீடான 20 சதவீதத்தில் உள்ஒதுக்கீடாக வழங்கப்படும்.
இந்த அரசாணை மூலம் முஸ்லிம்கள் மற்றும் மீனவர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் தலா 2 சதவீதம் இடஒதுக்கீடு பெறுவார்கள். இடஒதுக்கீடு அரசாணை பற்றிய விவரம் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசின் இணைய தள முகவரியில்(ஷ்ஷ்ஷ்.ஜீஷீஸீ.ஸீவீநீ.வீஸீ) வெளியிடப்பட்டுள்ளது.
Source: Dinakaran
No comments:
Post a Comment