Islamic Widget

September 02, 2010

பயிற்சித் தேர்வில் முதலிடம் பெற்ற போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

கடலூர்: போலீஸ் பயிற்சித் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற கடலூர் போலீஸ் பயிற்சி மாணவர் பாபுவை எஸ்.பி., பாராட்டினார். கடலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப் பட்ட 151 பேர் கடந்த ஐந்து மாதங்களாக எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றனர். பயிற்சியில் சட்ட வகுப்புகள், துப்பாக்கிச் சுடுதல், கவாத்து பயிற்சிகள் அளிக் கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்வு

நடந்தது. அதில் தமிழகத்தில் 24 போலீஸ் பயிற்சி பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 825 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் கடலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த 132 மாணவர்கள் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர். தேர்வில் மூன்று தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட 10 பதக்கங்கள் வெற்றனர். அதில் பாபு முதலிடம் பெற்றார். முதலிடம் பெற்ற பாபு மற்றும் அதிக மதிப்பெண் பெற்றவர்களை எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பாராட்டினார். ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். பயிற்சி முடித்த அனைத்து போலீசாரும் அடுத்த ஒரு மாதத் திற்கு போலீஸ் நிலையங்களில் பயிற்சி பெற உள்ளனர்.

Source: Dinamalar

No comments:

Post a Comment