சவுதி அரேபியாவில் நெயில் பாலிஷ்(Nail Polish) பூசிய நகங்களுடன் வந்த பெண்ணுடன் மத மாண்புகளை காக்க நியமிக்கப்பட்ட போலீஸ் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சவுதியில் பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள்.
வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ்
பூச்சுடன் வந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மத மாண்புகளைக் காக்கும் பொலிஸார் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியை அந்தப் பெண் யூடியூபில் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.அந்தப் பெண்ணின் பெயர் விவரம் தெரியவில்லை. அவர் ஒரு ஷாப்பிங் மாலுக்கு வருகிறார். அவரை மாலின் நடுப்பகுதியில் வைத்து போலீஸ் தடுக்கின்றனர். கையில் நெயில் பாலிஷ் போட்டுள்ளதன் மூலம் மத மாண்புகளுக்குப் புறம்பாக நடந்துள்ளீர்கள். எனவே உள்ளே வரக் கூடாது என்று உத்தரவிடுகின்றனர்.வாகனம் ஓட்டக் கூட அங்குள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.இந்த நிலையில் கை விரல்களில் நெயில் பாலிஷ்
ஆனால் அவரை உள்ளே விட அனுமதிக்க முடியாது என்று போலீஸ் கோபத்துடன் கூறுகின்றனர். அவர்களுக்கு அதே கோபத்துடன் பதிலடி கொடுத்து வாக்குவாதம் புரிகிறார் அப்பெண்.
மாலின் நடு ஹாலில் நின்றபடி நடந்த இந்த வாக்குவாதம் சவுதியில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனராம்.
No comments:
Post a Comment