Islamic Widget

May 30, 2012

கத்தார் நாட்டில் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து: 13 குழந்தைகள் உடல் கருகி பலி

கத்தார் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாயினர்.கத்தார் நாட்டின் தலைநகர் தோகா நகரின் மேற்கு பகுதியில் வில்லாஜியோ என்ற வணிக வளாகம் உள்ளது.இங்கு நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உடல் கருகி பலியாயினர். இவர்களில் 13 குழந்தைகள் ஆவர்.பலியானவர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என உள்துறை அமைச்சகம்
தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வணிக வளாகம் கடந்த 2006-ம் ஆண்டு தான் திறக்கப்பட்டது. தகுந்த பேரிடர் பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment