Islamic Widget

August 08, 2010

கடலூரில், இன்று: அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்


கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பழமையான கட்டிடத்தில் பிரசவ வார்டு செயல்பட்டு வந்தது. பிறகு புதிய கட்டிடத்துக்கு அந்த வார்டு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

பழைய கட்டிடத்தில் பழுதடைந்த மருத்துவ உபகரணங்கள், நாற்காலிகள், பெஞ்சுகள் உள்ளிட்ட மரச்சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.

இன்று பகலில் அந்தகட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீயைகண்டு அருகே உள்ள வார்டுகளில் இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வந்திருந்த உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் சுற்றுப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீயை அணைக்க ஆஸ்பத்திரி ஊழியர்கள், பொதுமக்கள் முயன்றும் பலனில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். சுமார் 1/2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்ட வசமாக தீ விபத்தில் நோயாளிகள் உள்ளிட்டயாரும் காயமடையவில்லை.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment