Islamic Widget

May 29, 2012

டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போது இல்லை - ஜெய்ப்பால் ரெட்டி!

பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ 7.50 உயர்த்தி பொதுமக்களுக்கு மத்திய அரசு அதிர்ச்சி அளித்த நிலையில் டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று இது குறித்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி '' டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை தற்போது கூட்டும் எண்ணம் இல்லை. 
டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் மத்திய அமைச்சர்கள்  குழுக் கூட்டம் நடைபெறும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது டீசல், சமையல் கேஸ் விலையின் கை வைக்கும் எண்ணம் இல்லை. டீசல் விலை உயர்ந்தால் ஏற்படும் பண வீக்க விளைவுகள் குறித்து  நிதி அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்துள்ளேன் '' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment