பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 4-ம் தேதி மாவட்டத்தில் பஸ்களை நிறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதென போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளது. கடலூர் மாவட்ட தனியார் பஸ் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூர் ஏ.ஐ.டி.யூ.சி. அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
மாவட்டத் தலைவர் குரு.ராமலிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கடலூர் பஸ் நிலைய லிங்க் ரோட்டை போக்குவரத்திற்கு அனுமதிக்காத மாவட்ட ஆட்சி நிர்வாகத்தைக் கண்டிப்பதுடன், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள சாலையில் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுவது, நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவரவும், ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டத்துக்கு தனியார் பஸ் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
÷பண்ருட்டி தலைவர் கோ.காமராஜ், விருத்தாசலம் செயலர் எல்.ஜோசப் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலர் பி.பண்டரிநாதன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் எம்.சேகர், கடலூர் பொருளாளர் ஏ.விஜய், துணைத் தலைவர் பி.புருஷோத்தமன், துணைச் செயலர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment