Islamic Widget

December 22, 2010

பரங்கிப்பேட்டை பள்ளி வாகனங்கள் மீதுநடவடிக்கை எடுக்க மனு

பரங்கிப்பேட்டை:அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் செழியன்,
கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:பரங்கிப்பேட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன.பெரும்பாலான தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களை அதிகளவில் ஏற்றிச் செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அரசு சம்மந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுத்தும் தற்போது விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்கள் ஏற்றிச்செல்கின்றனர்.சம்மந்தப்பட்ட பள்ளி வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment