
குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் காய்கறிப் பொருட்கள் வரத்து குறைந்து தட்டுப் பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை சரசரவென உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் மொத்த காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கேரட் கிலோ ரூ 50, வெண்டைக்காய் கிலோ ரூ 50, முட்டைகோஸ் கிலோ ரூ 40, தக்காளி கிலோ ரூ 35 க்கு விற்பனை செய்யப் படுவதாகத் தெரிவித்தார். வெங்காய விலையை கட்டுப் படுத்தும் நோக்கில் மத்திய அரசு வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் தமிழக அரசுவும் ஏழை நடுத்தர மக்களின் கஷ்டத்தை உணர்ந்து மொத்தமாக வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். செய்யுமா தமிழக அரசு?
Source:.inneram
No comments:
Post a Comment