Islamic Widget

November 07, 2010

குடிபோதையில் தகராறு செய்த வாலிபர் கைது

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே பொது இடத்தில் குடிபோதையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளங்கோ (35). இவர் நேற்று பொது இடத்தில் குடிபோதையில் அந்த வழியாக சென்றவர்களை தகாத வார்த்தையில் திட்டி, தகராறு செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவலறிந்த பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் சம்பவ இடத்திற்குச் சென்று இளங்கோவை கைது செய்தார்.


Source: Dinamalar

No comments:

Post a Comment